உலகம்

ரஷ்யா- உக்ரேன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு!

ரஷ்யா- உக்ரேன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டிய, முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன எனவும், எனவே, எந்த முன்னேற்றமுமின்றி, அமைதிப் பேச்சுவார்த்தையை மாதக்கணக்கில் தாம் தொடரப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் “போர் நிறுத்தம் குறித்து விரைவாக தீர்மானிக்க வேண்டும் எனவும், அது சாத்தியம் என்றால் மட்டுமே, ஜனாதிபதி ட்ரம்ப் அதற்கான மத்தியஸ்த முயற்சிகளை தொடர்வார் எனவும், இல்லாவிட்டால், இன்னும் சில தினங்களில், ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சியை அமெரிக்கா கைவிடும்” எனவும் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

உக்ரேன் – ரஷ்யா இடையே, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரியில் பதவியேற்ற ட்ரம்ப், இரு நாடுகளிடையே போரை நிறுத்த முயற்சியை ஆரம்பித்து வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *