இலங்கை

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் புலனாய்வுத்துறையினர்

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் புலனாய்வுத்துறையினர் ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் இருக்கின்றார்கள், தாக்குதல்களை மேற்கொண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார்கள் என்பது விசாரணை அறிக்கைகள் ஊடாக எமக்குத் தெரியவந்துள்ளது.

தாக்குதலின் பின்னணியிலிருந்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை அடையாளம் காண முடியாதளவிலேயே நாட்டின் பாதுகாப்புத்துறை காணப்படுவதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *