துண்டிக்கப்பட்ட தலையை மீண்டும் முதுகெலும்புடன் இணைத்து சாதித்த மருத்துவர்கள்

மருத்துவத்துறை நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் சாதித்து வருகிறார்கள்.
கால்பந்தை பிடிக்கும் போது விபத்து
அமெரிக்காவின் இல்லியானஸ் மாகாணத்தைச் சேர்ந்த மேகன் கிங்(35) என்ற பெண் ஒருவர், கடந்த 2005 ஆம் ஆண்டு தனது 16 வயதில் உடற்பயிற்சி கூடத்தில் நண்பர்களுடன் கால்பந்தை வீசி விளையாடிக் கொண்டு இருந்தனர்.
இதனையடுத்து, அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. மூட்டுகள் பலவீனமடைந்து தசைகள் கிழிக்கத் தொடங்கியது.
துண்டான தலைப்பகுதி
ஒரு வருடம் கழித்து அந்த பெண்ணின் கழுத்து எலும்பு நகர்ந்தது. கழுத்து மற்றும் தலையை நேராக வைத்திருக்க மண்டை ஓட்டில் ஹாலோ பிரேஸ் என்ற உலோக சாதனம் அவருக்கு பொருத்தப்பட்டது.
ஒரு கட்டத்தில், மருத்துவர்கள் அந்த பிரேஸை அகற்ற முயன்றபோது, அவரது மண்டை ஓடு அவரது முதுகெலும்பிலிருந்து பிரிந்துவிட்டது. அதாவது உடலின் உட்புறம் அவரது மண்டை ஓட்டு எலும்பு, உடலின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டது.
இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் துண்டாகும் நிலை இருந்ததால், நரம்பியல் மருத்துவர்கள் அவரது தலையை தாங்கி பிடித்து கொண்டிருக்க வேண்டி இருந்தது.
தலை மீண்டும் இணைப்பு
உடனடியாக, அடுத்தடுத்து 37 அறுவை சிகிச்சைகள் செய்து அவரது மண்டை ஓட்டை முதுகெலும்புடன் இணைத்தனர். ஆனால் அவரது தலையை உடம்புடன் சேர்த்தேதான் திருப்ப முடியும். பக்கவாட்டிலோ, மேலேயோ, கீழேயோ நகர்த்த முடியாது.
இது குறித்து பேசிய மேகன் கிங், “தற்போது நான் உண்மையில் ஒரு மனித சிலை. என் முதுகெலும்பு அசையவே இல்லை. ஆனால் அதற்காக நான் வாழ்வதை நிறுத்திவிட்டேன் என்று அர்த்தமல்ல” என தெரிவித்துள்ளார்.
மேகன் சமீபத்தில் அவருக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்றான பந்துவீச்சுக்குச் செல்ல முடிந்தது. ஆனால் அவருடைய புதிய உடல் என்ன செய்ய முடியும் என்பதை அவர் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறார்.