பலதும் பத்தும்
வெயிலை தணிக்க முயற்சி – வகுப்பறையில் மாட்டு சாணம் பூசிய கல்லூரி முதல்வர்

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ், லட்சுமி பாய் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
வகுப்பறையில் மாட்டு சாணம்
இந்த கல்லூரியின் முதல்வரான பிரத்யுஷ் வத்சலா, வகுப்பறை சுவர் முழுவதும் மாட்டு சாணத்தை பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்லூரியின் C ப்ளாக் கட்டத்தில் உள்ள வகுப்பறையில் முதல்வர் பிரத்யுஷ் வத்சலா மாட்டு சாணத்தை பூசியுள்ளார்.
இது குறித்து கூறிய அவர், இது கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆய்வின் ஒரு பகுதியாக செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். அதன் பின்னர் இது குறித்து உங்களுக்கு முழுமையான விளக்கம் அளிக்கிறேன்.
வெப்பத்தை குறைக்க ஆய்வு
வெப்பத்தை குறைக்க சுவற்றில் மாட்டு சாணம் பூசுவது, இந்திய பாரம்பரிய முறைகளில் ஒன்றாகும்.
மாட்டு சாணத்தை கையால் தொடுவதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதால் நானே சுவர்களில் பூசினேன். சிலர் முழு விவரங்களும் தெரியாமல் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்.
இங்கே வகுப்புகள் நடத்துபவர்கள் விரைவில் இந்த அறைகளை புதிய தோற்றத்தில் பெறுவார்கள். உங்கள் கற்பித்தல் அனுபவத்தை இனிமையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், இதே போல் காரை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக சிலர் தங்கள் காரின் மீது மாட்டு சாணத்தை பூசினார்கள்.