இலங்கை

மகிந்தவின் மனைவி மீது குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு

கம்பஹா பகுதியில் உள்ள ஒரு நிலத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளித்துள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச குறித்த நிலத்தை வேறொருவருக்கு விற்றுவிட்டு, பின்னர் அது ஒரு பௌத்த மையத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக மகிந்த ஜெயசிங்க கூறியுள்ளார்.

பௌத்த விகாரைக்கு சொந்தமானதாகக் கூறப்படும் இந்தக் காணியின் உரிமைகளை ஆய்வு செய்தபோது, ​​அந்தக் காணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு செந்தமானது எனவும்,

அவர் அதை 2012 பிப்ரவரி 05 அன்று கம்பஹா, மானெல்வத்தவில் உள்ள நாகானந்தா பௌத்த மையத்திற்கு மாற்றியமைத்ததும் தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.

இது பௌத்த மையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 2023 அக்டோபர் 10 ஆம் திகதி தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டதாகவும்,

அந்த நிலத்தில் உள்ள கட்டடத்திற்கான மின்சாரக் கட்டணத்தை ஒரு மதகுரு செலுத்தியதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தக் கோரி குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *