சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை இலங்கை ஏற்றுக்கொள்வது அவசியம்

உள்நாட்டு ஆயுத மோதலின் போது இடம்பெற்ற குற்றங்களிற்கு நீதியை வழங்குவதற்கும் அவற்றிற்கு முடிவை காண்பதற்கும் உதவும் என்பதால்,இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வது அவசியம் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிராந்திய இயக்குநர் ஸ்மிரிதி சிங் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.
குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள்,அல்லது சர்வதேச மனித மனிதாபிமான சட்டங்கள் பாரிய அளவில் மீறப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்து, ஒருங்கிணைத்து,பகுப்பாய்வு செய்து பாதுகாத்தலிற்கான ஆணையை கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறும் திட்டத்தை நிராகரித்தமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது பாதிக்கப்பட்ட இலங்கையர்களிற்கு நீதியை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறும் திட்டம் உட்பட ஆணையாளர் அலுவலகத்துடன் ஆக்கபூர்வமான விதத்தில் இணைந்து செயற்படவேண்டும்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்கவேண்டும்.
உள்நாட்டு ஆயுத மோதலின் போது இடம்பெற்ற குற்றங்களிற்கு நீதியை வழங்குவதற்கும் அவற்றிற்கு முடிவை காண்பதற்கும் உதவும் என்பதால்,இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வது அவசியம்.
இலங்கை இன்னமும் சர்வதேச குற்றங்களை அதன் உள்நாட்டு சட்ட கட்டமைப்பிற்குள் ஏற்றுக்கொள்ளவில்லை.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் ,சட்டத்தரணிகள், பத்திரிகையாளர்கள் , செயற்பாட்டாளர்கள்,நீதியை நாடும்போது துன்புறுத்தலை எதிர்கொள்வது உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம்அரசாங்கத்தை கேள்வி கேட்பவர்கள் உடன்பட மறுப்பவர்களிற்கு மீண்டும் மீண்டும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பயங்கரமான சட்டத்தை நீக்குவது குறித்து நீ ;ங்கள் உறுதிமொழி வழங்கிய போதிலும் அது தொடர்ந்தும் சட்டப்புத்தகத்தில் நீடிப்பது குறித்தும் , பயங்கரவாத செயல் அல்லாத குற்றங்கள் உட்பட பலவற்றிற்கு தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து அறிந்துள்ள நாங்கள் அது குறித்து ஏமாற்றமடைகின்றோம்.
சமீபத்தில் நீதிமன்றத்தில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக்காவலின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது பயங்கரவாத தடைச்சட்டத்தை தெளிவாக துஸ்பிரயோகம் செய்யும் நடவடிக்கை.
இதற்கு அப்பால் இந்த அரசாங்கம் பதவிக்குவந்தது முதல் பல தடவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் அதிகாரங்கள் ஏற்பாடுகளை பயன்படுத்தியுள்ளது, 2024 ஒக்டோபர் முதல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆறு பேரை தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.மேலும் மார்ச் 2025 இல் 22 வயது இளைஞனை தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தியுள்ளனர்.
நாங்கள் அறிந்த வகையில் இவர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எந்த குற்றச்சாட்டும் இதுவரை சுமத்தப்படவில்லை.
பயங்கரவாத குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கான நியாயபூர்வமான சந்தேகங்கள் இல்லாத போதிலும்,அதிகாரிகள் விசாரணைகளுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் பரந்த அதிகாரங்களை அதிகாரிகள் தற்போது நாடுகின்றார்கள் மற்றும் துஸ்பிரயோகம் செய்கின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயம்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப அமைந்திருப்பதையும்,பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் அதேவேளை மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சமகால சிறந்த நடைமுறைகளை கொண்டுள்ளதையும் உறுதி செய்யவேண்டும்.
![]()