உலகம்
சக்கர நாற்காலியோடு பிரார்த்தனையில் பங்கேற்ற போப் பிரான்சிஸ்!

வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் போப் பிரான்சிஸ் சக்கர நாற்காலியோடு கலந்து கொண்டார்.
உடல்நலம் பெற்றுள்ள போப் பிரான்சிஸ் சக்கர நாற்காலியோடு பிரார்த்தனையில் பங்கேற்றார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 2 வாரங்களுக்கு பிறகு, முதல் முறையாக பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட போப் பிரான்சிஸை கண்டு பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்று காரணமாக சுமார் 3 வாரங்களுக்கு சிகிச்சை பெற்ற அவர், கடந்த மார்ச் 23 ஆம் தேதி உடல்நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
![]()