கிராண்ட்ஸ்லாம் ட்ராக்கில் 100,000 டொலர்களை வென்ற ஹட்சன்-ஸ்மித்!

ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடந்த முதலாவது கிராண்ட்ஸ்லாம் ட்ராக் ( Grand Slam Track) போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற பிரித்தானியாவின் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மேத்யூ ஹட்சன்-ஸ்மித் 100,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையை வென்றார்.
வெள்ளிக்கிழமை நடந்த 400 மீட்டரில் இங்கிலாந்து ஓட்டப்பந்தய வீரர் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
தற்சமயம் சனிக்கிழமை நடந்த பந்தயத்தில் 200 மீட்டர் வெற்றியுடன் அவர் ஒருங்கிணைந்த தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து முதல் பரிசை வென்றார்.
30 வயதான ஹட்சன்-ஸ்மித், 20.77 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.
அதே நேரத்தில் டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவு நாட்டின் ஜெரீம் ரிச்சர்ட்ஸ் மற்றும் ஜமைக்காவின் டியாண்ட்ரே வாட்கின் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
2024 பாரிஸ் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹட்சன்-ஸ்மித், நான்கு முறை ஒலிம்பிக் சாம்பியனான மைக்கேல் ஜான்சன் தொடங்கிய புதுமையான நிகழ்வில் ரொக்கப் பரிசில் ஒரு பங்கைப் பெற்ற முதல் தடகள வீரர் ஆவார்.