முச்சந்தி

யாழ்.-நாகை பயணிகள் கப்பல் சேவையில் தடங்கல் எதுவுமில்லை

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான சிவகங்கை கப்பல் சேவையானது சீராக சேவையில் ஈடுபடுவதாகவும், எந்தவிதமான தடைகளும் இல்லாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் அந்த கப்பல் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் சேவையில் தடங்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கப்பல் சேவையில் தடங்கல் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையும் இல்லை.

பயணிகள் மிகவும் சௌகரியமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர்.

செவ்வாய்க்கிழமை தவிர்ந்த அனைத்து நாட்களும் கப்பல் போக்குவரத்து சேவை இடம்பெறுகிறது.

எனவே பயணிகள் www.Sailsubham.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலமாகவோ அல்லது 0212224647, 0117 642117 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ ஆசன பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.