சிக்கிய ஆபாசப்பட தொழில் செய்த தம்பதி

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் வெளிநாட்டினரின் நிதி உதவியுடன் ஆபாசப்படம் எடுப்பதையே 5 ஆண்டுகளாக தொழிலாக செய்து வந்த தம்பதி சிக்கியது.
உஜ்வால் கிஷோர் மற்றும் அவரது மனைவி நீலு ஸ்ரீவஸ்தவா ஆகியோர் நொய்டாவில் வசித்து வந்தனர். இந்த தம்பதி வெளிநாட்டினரிடம் இருந்து நிதி பெற்றுக்கொண்டு 5 ஆண்டுகளாக ஆபாசப்படம் எடுப்பதையே தொழிலாக செய்து வந்ததை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
இதனையடுத்து நொய்டாவில் உள்ள இந்த தம்பதியினரின் வீட்டில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடத்தியது. இதில் 15.66 கோடி ரூபா சட்டவிரோத வெளிநாட்டு நிதியைக் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த தம்பதி சமூக ஊடகங்களை பயன்படுத்தி மாடலிங் துறையில் விருப்பமுள்ள பெண்களை குறிவைத்துள்ளனர். மாடலிங் விளம்பரம் பார்த்து வரும் பெண்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச படத்தில் நடிக்கும் தொழிலில் தள்ளியுள்ளனர்.
இந்தியாவில் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பாக ரஷ்யாவில் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
இந்த மோசடியில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆபாச பட தொழிலில் தள்ளப்பட்டிருக்கலாம் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.