இலங்கை

அவுஸ்ரேலிய பிரஜையான யாழ்.வாசி மட்டு மாமாங்கத்தில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் நேற்று புதன்கிழமை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லத்துரை கெங்காதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் இருந்து மட்டக்களப்பு மாமாங்கம் 6ம் குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் வந்து தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் படுக்கையறையில் நித்திரைக்கு சென்றவர் அதிகாலையில் நித்திரையில் இருந்து எழுந்திராத நிலையில் அவரை எழுப்ப முற்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளதை கண்டு பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்

இதனையடுத்து சடலத்தை நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *