இலங்கை

வியாழேந்திரன் கைது – இரவோடு இரவாக வெடிகொழுத்தி கொண்டாட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததையடுத்து ஒன்றிணைந்த சில இளைஞர்கள் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில்   செவ்வாய்க்கிழமை (25) இரவு 9.00 மணியளவில் வெடி கொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கைது விவகாரத்தையடுத்து மாவட்டத்தில் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியிருந்தது.

இந்நிலையில், சம்பவதினமான இரவு 09.00 மணியளவில் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் இளைஞர்கள் குழு ஒன்றிணைந்து வெடிகளை கொளுத்தி சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

வெடி சத்தத்தால் அப்பகுதி அதிர்ந்ததையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *