உலகம்

பாகிஸ்தானில் இளம்பெண் ஆணவக்கொலை – தந்தை, அண்ணனுக்கு தூக்கு தண்டனை

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் டோபா டேக் சிங் நகரைச் சேர்ந்த இளம்பெண் மரியா பீபி. கடந்த ஆண்டு அவரது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் சேர்ந்து மரியாவை சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆனால் இதுகுறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே மரியா பீபியை குடும்பத்தினர் சேர்ந்து தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இதனையடுத்து ஆணவக்கொலை செய்ததாக போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் இருவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *