பலதும் பத்தும்

சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளுக்குப் பின்பு மின்சாரம் பெற்ற கிராமம்!

இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலம் டைம்னர் கிராமம் சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளுக்குப் பின்பு மின்சார வசதியினை பெற்றுள்ளது.

சத்தீஷ்கார் மாநிலம் நக்சலைட் பயங்கரவாதிகள் தாக்குதல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாகும்.

இங்கு பிஜபூர் மாவட்டத்தில் உள்ள டைம்னர் கிராமம், நீண்டகாலம் நக்சலைட்டுகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது.

இங்கு தற்போது 53 வீடுகளே உள்ளன. இந்த கிராமத்தில் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே மின்சாரம் கிடையாது.

மின்சாரம் கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு நக்சலைட்டுகள் முட்டுக்கட்டையாக இருந்தனர்.

தற்போது நக்சலைட் ஒழிப்பு வேட்டை வேகப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கான மறுவாழ்வு திட்டமும் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம், வீதி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ”மஞ்ச்ரா-டோலா” என்ற திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், டைம்னர் கிராமத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை வெற்றிகரமாக தொடங்கி வைத்து உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button