பலதும் பத்தும்

சுனிதா வில்லியம்ஸின் வருகையை கொண்டாடிய இந்தியர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் எதிர்பாராதவிதமாக 9 மாதங்கள் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ்  பூமிக்குத் திரும்பினார்.

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியதை உலகமே கொண்டாடி வரும் நிலையில், அவரது சொந்த ஊரான குஜராத் மாநிலம் மேஹ்சானா மாவட்டம், ஜுலாசன் கிராமத்தில், அவர் பாதுகாப்பாக பூமி திரும்ப வேண்டும் என்று வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிவிட்டார் என்று செய்தி வெளியானதும் கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.

சுனிதா வில்லியம்ஸ் பிறந்தது 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் திகதி, அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில். இவர்களது பெற்றோர் தீபக் பாண்டியா – போன்னி பான்டியா.

இவரது தந்தை தீபக் பாண்டியா, நரம்பியல் நிபுணர் (நியூரோசயின்டிஸ்ட்). 1957ஆம் ஆண்டு இவர் வேலைக்காக அமெரிக்கா சென்று, அங்கு உர்சுலைன் போன்னி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் சுனிதா வில்லியம்ஸ். சுனிதாவின் தந்தையின் பூர்வீகம் குஜராத் மாநிலத்தின் ஒரு அழகிய கிராமம் என்பதே, இந்தியாவுக்கும் சுனிதாவுக்கும் உள்ள தொடர்பு.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் வில்மோா் ஆகியோரை பூமிக்கி திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக நாசா தெரிவித்துள்ளது. டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸுடன் சேர்த்து பட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கார்புனோவ் ஆகிய 4 வீரர்களும் பூமிக்கு பத்திரமாகத் திரும்பியுள்ளனர்.

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீரரான பிறகு மூன்று முறை, அதாவது 1972, 2007, 2013-ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு குறிப்பாக அவரது சொந்த கிராமத்துக்கு வருகை தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button