பலதும் பத்தும்

ஏலத்தில் விடப்படும் டுவிட்டர் பறவை!

டுவிட்டர் நிறுவனம் தனக்குச் சொந்தமான நீலநிறப் பறவை இலச்சினையை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவந்த டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கி எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார். அதன் பின்னர் எக்ஸ் பக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுத்தார்.

இதனிடையே ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட ட்விட்டர் நிறுவனத்தின் நீல நிறப் பறவை இலச்சினையை ஏலத்திற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏலத்தின் ஆரம்ப விலையாக 21,664 டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு , ஏலம் எடுப்பவர்கள் இலச்சினையை எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டும் என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட குறித்த சின்னம் 254 கிலோ கிராம் நிறையுடையதாகும். மேலும் குறித்த ஏலமானது மார்ச் 20ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அதன் பிறகு அதிக தொகை கோரியவர்களுக்கு இலச்சினை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button