இலங்கை

அரசாங்கம் இன்னும் பிள்ளைப் பருவத்திலேயே உள்ளது

அரசாங்கம் இன்னும் பிள்ளைப் பருவத்தில் உள்ளதாக அமைச்சர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சி அமைத்து சில காலங்களே கடந்துள்ளதாகவும் ஐந்து ஆண்டுகள் கடக்கும் போது பாரியளவு வேலைகளை அரசாங்கம் பூர்த்தி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் ஐந்து லட்சம் தென்னங்கன்றுகளை விநியோகம் செய்யும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2048ம் ஆண்டில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகவும் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாகவுமே வாக்குறுதி அளித்திருந்தார் என சமந்த வித்தியாரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியை பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் சரியான பாதையில் பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.

நாடு சரியான பாதையில் பயணிப்பதனை நாட்டு மக்கள் ஆதரிக்கும் அதேவேளை, எதிர்க்கட்சியினர் அதனைக் கண்டு பதற்றமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மோசடிகள் முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்கள் தற்பொழுது அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக சமந்த வித்தியாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *