பலதும் பத்தும்
பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை!

உடலில் பச்சை குத்தியவர்கள் பொலிஸ் துறையில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப் படைகளில் பணிபுரிய விரும்பினாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல் எனவும், அந்த தோலை அழிப்பது நல்ல விடயம் அல்ல எனவும், எனவே உடலில் பச்சை குத்தியவர்களை எந்த ஆயுதப் படையிலும் இணைத்துக் கொள்ள வாய்ப்புக் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.