உலகம்

காசாவில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்; 11 பேர் உயிரிழப்பு..!

வடக்கு காசாவில் இஸ்ரேல்  நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

வடக்கு காசாவில் பெய்ட் லாஹியாவில் நேற்று மாலை பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான் வழியாக நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் இந்தோனேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.