இலங்கை

வடக்கு முதலமைச்சர் பதவிக்கு நான் போட்டியிட மாட்டேன்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தனக்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில்  நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் வருகிறது. அந்த வகையில் சில மாற்றங்கள் நிகழலாம். முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவது தொடர்பாக சிறீதரன் நேரடியாக சொல்லவில்லை. ஆனால் மாகாண சபை தேர்தல் வருகிறது. சிறீதரன் எம்.பி பதவியிலிருந்து விலகுவாராக இருந்தால் நான் பாராளுமன்றம் செல்வேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலரும் முன்னாள் எம்.பி.யுமான எம்.ஏ. சுமந்திரன் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தனக்கு இல்லை என சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாகாண சபை தேர்தல் நடாத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தனிநபர் பிரேரணைகூட கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் 50வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு வந்தது.

நாங்களும் அதற்கு எதிர்ப்பு இவ்வாறான இழுபறியில் மாகாண சபை தேர்தல் உள்ளது. இவ்வாறானதொரு சூழ் நிலையில் மாகாண சபை தேர்தல் நடந்தால் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு நான் தயாரில்லை, கட்சி நீதிமன்ற வழக்கில் உள்ளது.

கட்சியில் உள்ளவர்களே வழக்கினை தாக்கல் செய்திருக்கின்றனர். தாயினை நீதிமன்றத்தில் வைத்துக்கொண்டு தாயிடம் உணவு கேட்பது.

பால் அருந்தப் போகின்றோம் என்று சொல்வது இனவிடுதலைக்கான அரசியல் அல்ல நாங்கள் செய்வது பதவிகளுக்கான அரசியல் அல்ல இன விடுதலைக்கான அரசியல் பதவிகளுக்கு அரசியல் செய்வது தவிர்க்கப்படவேண்டும்.

இவ்வாறான சூழல் இருக்கும் போது நான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் இல்லை என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *