பலதும் பத்தும்

தெலங்கானா கோயிலில் மிக உயரமான தங்க கோபுரம்

தெலங்கானா மாநிலத்தின் யாதகிரிகுட்டாவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கோபுரத்துக்கு முதல்வா் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம்   நடைபெற்றது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில், ‘தங்க முலாம் பூசப்பட்ட புதிய கோபுரத்துடன் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோயிலின் மகா கும்பாபிஷேக நிகழ்வில் முதல்வா் ரேவந்த் ரெட்டி பங்கேற்றாா். தங்க முலாம் பூசப்பட்ட இக்கோயிலின் 50.5 அடி உயர கோபுரம், இப்போது நாட்டிலேயே மிக உயரமானது. இதற்காக 68 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பின்னா், ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்த முதல்வா் ரேவந்த் ரெட்டி, வேத பண்டிதா்களிடம் ஆசி பெற்றாா். வானமாமலை மடத்தின் 31-ஆவது பீடாதிபதியான ராமானுஜ ஜீயா் சுவாமிகள் தலைமையில் கோயில் கும்பாபிஷேக சடங்குகள் நடைபெற்றன’ என்று தெரிவிக்கப்பட்டது.

கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட அளவு 10,759 சதுர அடியாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button