இலங்கை

தப்பித்த செவ்வந்தி இந்தியா சென்றாரா?; படகில் தப்பிக்க முயன்ற போது பிடிபட்ட கொலையாளி 

கணேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சந்தேக நபர்(கொலையாளி), கல்பிட்டிக்கு தப்பிச் சென்று அங்கிருந்து படக்கிக்கின் மூலம் இந்தியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் கொலையுடன் தொடர்புடைய செவ்வந்தி என்ற யுவதி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றில் இடம்பெற்ற கொலைக்குப் பிறகு கொலையாளி கல்பிட்டிக்கு தப்பிச் செல்லும்போது வெளிநாடுகளுக்கு மூன்று அழைப்புகளை மேற்கொண்டதாக கொழும்பு குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளிநாட்டில் வசிக்கும் கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் அச்சிந்த ஆகிய மூன்று இலங்கை பாதாள உலககுழு உறுப்பினர்கள் இந்த அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகரகமவைச் சேர்ந்த சமிந்து தில்ஷான் பியுமாங்க கண்டனாராச்சி என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், 15 மில்லியன் ரூபா பணத்திற்கு ஒப்பந்தக் கொலையைச் செய்ததாக புலனாய்வாளர்களிடம் கூறியுள்ளார்.

கொலைக்கான ஏற்பாடுகள் நடந்த காலப்பகுதியில் அவர் கடுவலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார்,அங்கு ஒப்பந்ததாரர்களால் போலியான இலங்கை வழக்கறிஞர்கள் சங்க அடையாள அட்டை வழங்கப்பட்டது. கொழும்பிலிருந்து கல்பிட்டிக்கு தப்பிச் செல்லும் வேன் மற்றும் அங்கிருந்து இந்தியாவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளும் அவர்களால் செய்யப்பட்டிருந்ததாக கொழும்பு குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

சந்தேக நபரின் கையடக்க தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து எடுக்கப்பட்ட அழைப்பு விாரங்களை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாகவும் குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை கொலையுடன் தொடர்புடைய மற்றைய பெண்ணை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

24 வயதான செவ்வந்தி என்ற பெண் வெளிநாடுகளிலுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடத்தல் தலைவர்களுடன் நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பெண் திட்டமிட்டபடி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *