முச்சந்தி
பிரித்தானிய துருப்புக்கள் உக்ரைனில்?… அமெரிக்காவுடன் முரண்படும் ஜெலன்ஸ்கி!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

அமெரிக்காவை மீறி பிரித்தானியத் துருப்புக்கள் உக்ரைன் போரில் நேரடியாக கலந்து கொள்வது சாத்தியமற்ற ஒரு செயலாகவே கருதப்படுகிறது. பிரித்தானிய துருப்புக்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எல்லாம் அரசியல் ரீதியான இலாபங்களுக்கான வாய்ச்சவாடல்களாகவே கருதப்படுகின்றன.
உக்ரைனில் பிரித்தானிய துருப்புக்கள் ?
இவை எல்லாவற்றவையும் விட பிரித்தானிய பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை இன்னோர் நாட்டில் பலிக்கடாவாக்க சம்மதிக்க மாட்டார்கள். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரித்தானிய படைகள் எந்தவொரு பாரிய படை நகர்த்தல்களையும் நடாத்தவில்லை என்பதையும் அவதானிக்க வேண்டும்.
உக்ரைனிய போரில் அமெரிக்காவின் புதிய தலைமை தமது நிலைப்பாட்டை மாற்றுவதால், இங்கிலாந்து தனது துருப்புக்களை உக்ரைனுக்கு அனுப்ப வாய்ப்புள்ளது என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.அத்துடன் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை விரைவு படுத்துவதில் இங்கிலாந்து முன்னணிப் பங்காற்றத் தயாராக உள்ளது. தேவைப்பட்டால், தமது சொந்தப் படைகளை தரையில் நிறுத்துவதன் மூலம் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு பங்களிக்கத் தயாராகவும் விருப்பமாகவும் இருப்பதும் இதன் பொருள் என்றும் அவர் தெரிவித்தார்.
உக்ரைன் நாட்டுக்கு பிரிட்டிஷ் படைகள் அனுப்புவதை நான் எளிதாகச் சொல்லவில்லை. பிரிட்டிஷ் படைவீரர்களையும் பெண்களையும் ஆபத்தில் ஆழ்த்துவதில் வரும் பொறுப்பை நான் மிகவும் ஆழமாக உணர்கிறேன்.
ஆயினும் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்தவொரு பங்கும் நமது ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பையும் பிரித்தானிய நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு உதவுவதாகும்.
இந்தப் போரின் தற்போதைய முடிவு, அது வரும்போது, புட்டின் மீண்டும் தாக்குவதற்கு முன்பு
ஒரு தற்காலிக இடைநிறுத்தமாக மாற முடியாது. மீண்டும் ரஷ்யா தனது படையெடுப்பை முழுமையாக நிறுத்த வேண்டும் என பிரித்தானிய பிரதமர் தெரிவித்தார்.
ஒரு தற்காலிக இடைநிறுத்தமாக மாற முடியாது. மீண்டும் ரஷ்யா தனது படையெடுப்பை முழுமையாக நிறுத்த வேண்டும் என பிரித்தானிய பிரதமர் தெரிவித்தார்.பாரிஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னதாகப் பேசுகையில், அமெரிக்க அதிபர் தலைமையால் உக்ரைனை பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்குவதற்கு எதிராக எச்சரித்தார். அதை அமெரிக்க-தலிபான் பேச்சுவார்த்தைகளுடன் ஒப்பிட்டும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்.
உக்ரைன் நாட்டுக்கு குறைந்தளவு 100,000 பிரித்தானிய துருப்புக்கள் தேவைப்படலாம் என்று மதிப்பிடுகின்றனர். ஆனால் உண்மையில் யார் தான் ரஷ்யாவை எதிர்த்து போரிட போகின்றார்கள் என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பிரிட்டனின் இராணுவம் வளங்களால் நிரம்பி வழிவதில்லை என்பதும் மற்றொரு முக்கிய விடயமாகும். மேலும் இங்கிலாந்து ஜெனரல்கள் அதிக பாதுகாப்பு செலவினங்களைக் தற்போது கோரி வருகின்றமை அரசுக்கு உள்ள பாரிய தலைவலியாகும்.
ஆனாலும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரித்தானிய படைகள் எந்தவொரு பாரிய படையெடப்பை எந்தவொரு நாட்டின் மீதும் நடாத்தவில்லை. 1980களில் ஆர்ஜன்டீனா போரைத் தவிர பிரித்தானிய படைகள் பாரிய அளவில் போரிடவில்லை.நேட்டோவில் பிரித்தானியா அங்கம் வகித்தாலும், உக்ரைன் போரில் நேரடியாக கலந்து கொள்வது சாத்தியமற்றதாகும். தற்போது அமெரிக்காவை மீறி உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானிய துருப்புக்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள்
வெறும் வாய்ச்சவாடல்களாகவே கருதலாம்.
நேட்டோவில் உக்ரைனுக்கு இடமில்லை:
இதற்கிடையில், டிரம்பின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், உக்ரைன் நேட்டோவில் இணையும் யோசனையை நிராகரித்துள்ளார். உக்ரைனின் நேட்டோ நம்பிக்கைகள் மற்றும் 2014 க்கு முந்தைய எல்லைகள் யதார்த்தமானவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.ஆயினும் டிரம்ப் உண்மையில் ரஷ்யாவுடன் எங்கு நிற்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க ஐரோப்பா போராடி வருகிறது. ரஷ்யாவுடன் எப்போதும் நட்புச் சூழ்நிலையை உருவாக்க டிரம்ப் முயன்று வருகிறார். ஆயினும் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் ரஷ்யாவை பகைப்பது என்பது பலருக்கும் தெரிந்த விடயம் தான். ஆயுத விற்பனைக்கும் போர்ப்பகைமை சூழலை தங்கள் அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
ஐரோப்பிய இராணுவம் சாத்தியமா ?
ஐரோப்பிய பாதுகாப்புக்கு அமெரிக்கா இனியும் உதவாது என்பதால் பிராந்தியத்துக்கான பொதுவான ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர்
அழைப்பு விடுத்துள்ளார். ஆனாலும் இதனை உருவாக்குவது பற்றி அவர் எதனையும் தெளிவாக தெரிவிக்கவில்லை.
அண்மையில் நடந்த ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், ஐரோப்பிய பிராந்தியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்லாண்டுகளாகத் தொடர்ந்துவரும் நல்லுறவு முடிவுக்கு வருவதை தெளிவுபடுத்திவிட்டார். இதனாலேயே ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்கால நிலமை இதுவரை இருந்ததுபோல் இருக்காது. அதற்கேற்ற வகையில்
ஐரோப்பியப் பிராந்தியம் தன்னை நிலைநிறுத்தி தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
ஐரோப்பியப் பிராந்தியம் தன்னை நிலைநிறுத்தி தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.இனி வரும் காலங்களில் ஐரோப்பிய பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு அச்சுறுத்தல் வரும்போது உதவியளிக்க அமெரிக்கா மறுத்து விடுவதற்கான வாய்ப்புள்ளது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
எனவே, இந்த நேரத்தில் நமக்குத் தேவை ஐரோப்பியாவுக்கான பொது ராணுவம்தான். ஏற்கெனவே நமக்கென்று ஒரு தனி ராணுவத்தை அமைப்பது குறித்து பல ஐரோப்பிய தலைவர்கள் பேசியுள்ளனர். தற்போது அதனை நிறைவேற்றுவதற்கான தருணம் வந்துள்ளது என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் பாரியளவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முரண்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய பொது இராணுவம் உருவாக்கப்படுவது சாத்தியமானதாக தெரியவில்லை.
பிரித்தானியாவில் தற்போதைய அரசு பொதுமக்கள் கருத்தை அறியாமல்தங்கள் சொந்த வீரர்களை அந்திய நாட்டில் பலிக்கடாவாக்க சம்மதிக்க மாட்டார்கள் எனபதும் உண்மையே.
ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடையும் ரஷ்ய எதிர்ப்புணர்வால், உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எல்லாம் தேர்தல் அரசியல் ரீதியான இலாபங்களாகவே கருதப்படுகின்றன.
அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானிய துருப்புக்கள் உக்ரைனில் நேரடியாக களமிறக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியே. ஏனெனில்
அமெரிக்காவை மீறி பிரித்தானியத் துருப்புக்கள் உக்ரைன் போரில் நேரடியாக கலந்து கொள்வது சாத்தியமற்ற ஒரு செயலாகவே கருதப்படுகிறது.
![]()