இலங்கை

மன்னாரில் வாசலில்…. கொழும்பில் கூண்டினுள்….  படுகொலைகள் என்கிறார் நாமல் 

மன்னார் நீதிமன்றத்தின் வாசலில் படுகொலை, கொழும்பு நீதிமன்றத்தில் சாட்சிக் கூண்டினுள் படுகொலை நடந்துள்ளது. சட்டத்தரணிகள் போல் கொலையாளிகள் நீதிமன்றத்துக்குள் செல்கிறார்கள்.இந்த செய்தி சர்வதேசத்துக்கு சென்றால் யார் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்எம்.பி.யான நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய

அவர் மேலும் பேசுகையில்,

நாடு பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டுமானால் முதலில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தேசிய பாதுகாப்புக்கு இம்முறை குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அனைவரும் சுதந்திரமாக வீதியில் செல்ல முடியும் என அமைச்சர் ஒருவர் கூறுகின்றார் நாட்டின் நிலைமை அவாறாகவா உள்ளது?

செவ்வாய்கிழமை இரவு மித்தெனிய பகுதியில் சிறுமி உட்பட ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதியின் முன்னிலையில் சாட்சிக்கூண்டிற்குள் வைத்து படுகொலை இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்தின் வாசலில் வைத்து படுகொலை இடம்பெற்றது .இன்று (நேற்று)கொழும்பு நீதிமன்றத்துக்குள் சாட்சிக்கூண்டுக்குள் வைத்து படுகொலை இடம்பெற்றுள்ளது.சட்டத்தரணியை போன்று வேடமிட்டு கொலையாளிகள் நீதிமன்றத்துக்குள் செல்கிறார்கள்.இந்த செய்தி சர்வதேசத்துக்கு சென்றால் யார். நம்பிக்கையுடன் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வார்கள்?ஆகவே கடந்த காலங்களை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் நாட்டின் தேசிய பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *