இலங்கை

கட்டுப்பணத்தை மீளளிக்கத் தீர்மானம்

2023 ஆம் ஆண்டில் நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பணத்தை வைப்பு செய்தமைக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கள் சமர்ப்பிக்கப்படுமாயின், அவர்களுக்கு அப்பணம் மீளளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை வைப்புச் செய்த பற்றுச் சீட்டின் மூலப்பிரதி,வைப்புப் பணம் மீளளிப்புச் செய்வதற்கான விண்ணப்பக் கடிதம் ஆகியவற்றை கட்டுப்பணத்தை வைப்புச் செய்துள்ள குறித்த மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *