இலங்கை

கதிரை சின்னத்தில் போட்டியிட தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான வர்த்தமானியை வெளியிட்ட பின்னர் தனது கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தேர்தல்கள் ஆணைக்குழு இன்னுமும் தேர்தல் வர்த்தமானியை வெளியிடவில்லை.

நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கதிரை சின்னத்தில் போட்டியிடுவோம். அதற்கு தயாராக உள்ளோம். வேட்புமனுக்கள் எப்போது தாக்கல் செய்யப்படும், எந்த திகதியில் நடைபெறும் என்பதற்காக எங்கள் வேட்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.

விரைவில் வெளியிடப்படும் என்று நம்புகிறோம். வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகின்றனர்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் மூலம் முன்வைக்கப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டம், வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் அவர்களின் வெற்றிக்காகவே என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஏமாற்றப்பட்டது போலவே, உள்ளூராட்சித் தேர்தலிலும் ஓரளவுக்கு மக்களை ஏமாற்றும் வகையில் வரவு செலவுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *