உள்ளூராட்சித் தேர்தலில் ரணில் – சஜித் தரப்பு தனித்தே போட்டி!

ஐக்கிய மக்கள் சக்திக்குள் நிலவும் உள்ளக முரண்பாடுகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன இணைந்து போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு இருக்கட்சிகள் சார்பிலும் உத்தியோகபூர்வ குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதன்படி, பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அந்த விவாதங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், பேச்சுவார்த்தைகளில் இருந்து தங்கள் கட்சி இன்னும் விலகவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் சமீபத்தில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக் கொண்டார். தனது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள் நெருக்கடிகள் காரணமாக இந்த விவாதங்களில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார்.
தற்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில இடங்களில் தனித்து போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகியுள்ளது. அத்துடன் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
![]()