ஊடுருவல்… ஏலையா க.முருகதாசன்

தமிழகத்திலிருந்து சங்கிலி இராஜகுமார் என்பவர் திரு.ஈ.வே.பெரியாருக்கு இலங்கையில் தமிழர்: பகுதிகளில் சிலை வைப்பது தொடர்பாக கூட்டம் போட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார்.
இது இவராகப் பேசவில்லை,இதற்குப் பின்னால் இந்தியாவின் சூழ்ச்சிகூட இருக்கலாம் என இலங்கைத் தமிழர்கள் நினைக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து வந்து பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம்.
இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து இலங்கையர் என்ற பெயரில் வாழ்வதையே விரும்புகிறார்கள்.இலங்கையை வளமிக்க நாடாக உயர்த்த வேண்டும் என்றும்,ஜனாதிபதி தோழர் திரு.அநுரகுமார திஸநாயக்காவின் ஆட்சிக் காலத்தை நாட்டின் வளர்ச்சிப் பாதையில் கொண்டு போக முடிவெடுத்துள்ளார்கள்.
கடந்த காலங்களில் ஒரே உணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டிய சிங்களவர்களும் தமிழர்களும் ஏன் முரண்பட்டோம் அதனால் இலங்கையின் பொருளாதாரம்,இலங்கை மக்களின் வளமான நல்வாழ்வு போன்றவை ஏன் சீரழிந்தது என்பதையெல்லாம் சிந்தித்து இனியாவது நாங்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காக வடகிழக்கு பகுதி மக்கள் நடைமுறை அரசுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.
காலத்துக்கு காலம் இலங்கைக்கும்,புலம்பெயர்ந்த நாடுகளுக்கும் நல்லிணக்கத் தூதுவர்களாகவும்,தொப்புள்கொடி உறவுகள் என்று சொல்லிக் கொண்டு வந்து தமிழர்களின் உரிமைபற்றி அ ஆ அரிச்சுவடி சொல்லிக் கொடுத்தவர்களை வானளாவ தூக்கிப் பிடித்தவர்கள் இலங்கை எவ்வளவு முன்னேற்றகரமான நாடாக இருந்தது என்பதை மறந்துவிட்டார்கள்.
திரு.பிரபாகரனின் பெயரைச் சொல்லி இலங்கைத் தமிழர்களை எவ்வாறு கையாளுவது,தமிழர்களைச் சொல்லி சிங்களவர்களை எவ்வாறு கையாள்வது,சிங்களவர்களைச சொல்லித் தமிழர்களை எவ்வாறு கையாள்வது,திருவள்ளுவரைச் சொல்லி அவர் பெயரில் யாழ்ப்பாணத்தில் பண்பாட்டு மையம் அமைத்து தமிழர்களை எவ்வாறு பைகயாள்வது,திரு.ஈ.வே.இராமசாமி நாயக்கரின்,ஈ.வே.பெரியார் என்ற பெயரைச் சொல்லி அவரை ஆதரிக்கும் தமிழர்களை எவ்வாறு கையாள்வது,காலம் காலமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதிகள் எடுத்ததெற்கெல்லாம் தமிழ்றநாட்டுக்கு ஓடிச் செல்வதும் போதாதற்கு யாழ்ப்பாணத்திலிருக்கும் இந்தியத் துணைத் தூதரைச் சந்தித்து தேர்தலுக்குப் பின்னரான காலங்களில் நாங்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கருத்து என்ன என்று பணிவதும் இப்படியான தந்திரங்களை இந்தியா பயன்படுத்தி வருவதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இலங்கைக் கடலுக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிக்கிறார்கள் என்பது தெரிந்தும்,அது தவறு என்று தெரிந்தும் அதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் இலங்கைக் கடற்படைக்கு ஆதரவாகவோ,இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாகவோ எந்தவொரு தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசியதில்லை.
தமிழகத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் தமிழராய் ஒரே இனமாயினும் தமிழகத்
தமிழர்கள் இந்தியாவைத் தமது நாடாகக் கொண்டவர்கள்,இலங்கைத் தமிழர்கள் இலங்கையைத் தமது தாய் நாடாகக் கொண்டவர்கள் என்பதை தமிழரசுக் கட்சியினர் அடிக்கடி மறந்துவிடுகிறார்கள்.
இந்தியாவின் ஊடுருவலில் அண்மையில் இடம்பெற்றதுதான் இந்தியாவினால் யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவரின் பெயரை முன்னிறுத்தி கட்டப்பட்ட பண்பாட்டு மையமாகும்.
இந்தியச் தமிழ்ச் சமூகத்திலிருந்து வந்தவர்தான் திருவள்ளுவர் எனும் தத்துவஞானி.அவர் தமிழராக இருந்தாலு,ம் அவரை பொதுவானவராகவே உலகம் கொண்டாடுகின்றது.
அது போலத்தான் சிறந்த தமிழ்த் தத்துவஞானியான திருவள்ளுவரை இலங்கைத் தமிழர்களும் கொண்டாடுகிறார்கள்.
இந்த நிலையில்தான் இப்பொழுது மாவிட்டபுரத்தில் கீரிமலை வீதியில் திருவள்ளுவர் மண்டபம் கட்டப்பட்டிருக்கின்றது. இது ஒரு தமிழ்த் தத்துவ ஞானிக்கு இலங்கைத் தமிழர்கள் கொடுத்த மதிப்புணர்ந்த செயல்பாடாகும்.
தமிழக அறிஞர்களின் சிலைகளை இலங்கையில் நிறுவியதன் மூலம் அதன் வழியாக இந்தியா தனது ஆளுமையை தமிழருக்கூடாகவும் இலங்கைக்குள் செலுத்துவார்கள்,அரசியலில் பல பிரச்சினைகளை உருவாக்குவார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல்.
இந்தியா எமது பக்கத்து நாடு என்ற ரீதியில் அவர்களை இலங்கை மக்களோ,தமிழ்நாடு அங்கிருப்பதால் தமிழர்கள் இன்னும் கூடுதலாக ஒரு அக்கறை வைப்பதோ அவையெல்லாம் வேறு.
பொருளாதார ரீதியாக இலங்கைக்கு உதவி செய்வது என்பது உலகளாவிய ரீதியில் உலகநாடுகளில் நடைமுறையில் இருக்கும் வணிக,பெகாருளதார,தொழில்துறைகளின் கட்டமைப்பாகும்.
இந்தியா தனது வெளிநாட்டுக் கொள்கையில் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளும் இராஜதந்திர அணுபுமுறைக்கப்பால் இலங்கையை தமது கட்டுப்பாட்டிலிருந்து அங்குமிங்கும் அசையவிடாமலிருப்பதற்கான உளவு வேலைகளை செய்து கொண்டிருக்கின்றது.
இலங்கை சீனா,அமெரிக்கா,அரேபிய நாடுகள் இன்னும் தனது வணிகத்தையோ,பொருளாதார அலகுகளையோ மேம்படுத்துவதற்காக தொடர்புகளைப் பேணலாம்.
ஒரு நாட்டின் இறைமை வேறு,அந்த நாடு மற்றைய நாடுகளுடன் பல்வேறு காரணங்களுக்காக அவர்களுடன் தொடர்புகளைப் பேணுவது வேறு.
இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்குள்; தலையிடும் உரிமை வெளிநாடுகளுக்குக் கிடையாது.
தமிழர்களினதும்,சிங்களவர்களினதும் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை எடைபோடுவதில் ஒன்றாக தமிழரின்: உரிமைக்கென்று சொல்லிக் கொண்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டம் இந்தியாவால் நடத்தப்பட்டதுதான் என்பதே நுணுக்கமாக கண்டறிந்த உண்மையாகும்.
ஆயுதம் தாங்கிய தமழீழ விடுதலைப் போராட்டம் நியாயமானது என்று தமிழ்நாட்டிலிருந்து வந்த அறிஞர்களால் சொல்லப்பட்டு அதை நம்ப வைத்து ஒரு ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுக்கும் போது அரசின் எதிர்வினையாற்றல் தமிழர்களின் உயிர்களையும் அவர்களின் பொருளாதாரத்தையம் அடிமட்டமாக அழிக்கும் என்ற தந்திரத்தின் அடிப்படையிலேதான் தாம் நினைத்ததை,அதன் போக்கிலேயே தமிழர்களைப் போக வைத்து இலங்கையில் இன முரண்பாட்டுடன் கூடிய பொருளாதாரப் பேரழிவை இந்தியா நடத்தியிருந்தது.
இதை புரிந்து கொள்வது,இனப்போரியல் வரலாறு தெரிந்த துறைசார் கல்வியாளர்களால்தான் முடியும் என்று இல்லை.சாதாரண மனிதர்களால்கூட ஏன் எப்படி எதனால் என்றங ஆதிஅந்தத்தை நோக்கி தமது சிந்தனையைச் செலுத்துவார்களானால் இந்தியாவின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும்.
தமிழர்களை வைத்து ஆயுதப் போராட்டத்தை உருவாக்கியது போல சிங்கள பௌத்த தீவிரப் போக்குடைய பௌத்த குருமாரை வைத்து இலங்கை பௌத்த நாடே என்று முன்னிலை ஊடாக இராஜதந்திர காயை நகர்த்தி வருகின்றது.
சிங்களவர்களும் தமிழர்களும்,சிங்களவர் தமிழர் என்ற வேறுபாட்டினை தூக்கி எறிந்துவிட்:டு
இலங்கையர் என்ற புதுப்பெயருடன் புதிய அரசியல் வடிவத்தை உருவாக்க வேண்டும்.
இலங்கையின்: அரசியல் வரலாற்றில் எந்த ஜனாதிபதிக்கும் இல்லாதவாறு தமிழர்கள் மத்தியில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவுக்கு ஆதரவு பெருகி வருவதும்,வல்வெட்டித்துறையிலேயே அதன் ஆரம்ப தோற்றம் உருவாகியதை இந்தியா சாதாரணமாக நினைக்கவில்லை.
இலங்கைக்குப் பெரும் பொருளாதாரத்தை ஈட்டித் தந்து கொண்டிருந்த பொருளாதார அலகுகளில் ஒன்றான வணிகத்தை தமது கையில் வைத்திருந்த இந்தியச் செட்டிமார்களும்,மலையாளிகளும் தமது வணிகம் இலங்கைத் தமிழர்களின் கைகளுக்கு மாறுவதைத் சகிக்க முடியாமல் அமைச்சர்களையும் இனவாதிகளையும் தமது பணச் செல்வாக்கினாலும்,கார்,வீடு போன்றவற்றை அன்பளிப்பாகவும் இலஞ்சமாகவும் கொடுத்து அவர்களைத் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு வணிகக் கலவரத்தை ஏற்படுத்தி அதனை இனக்கலவரமாக மாற்றினார்கள்.
இலங்கையில் பண்பாட்டுப் போர்வை என்ற பெயரில் இன்னொரு பண்பாட்டுக் கலவரத்தை இலங்கையில் ஏற்படுத்தும் முயற்சியில் இப்பொழுது திரு.ஈ..வே.ரா அவர்களுக்குச் சிலை வைக்க வேண்டும் என்று மேடை போட்டுப் பேசி வருகின்ற சங்கிலி இராஜ்குமார் என்பவர் இந்தியாவின் ஒற்றர்தான் என்பதே உண்மை.
![]()