முச்சந்தி
அமெரிக்காவின் பொருளாதர போரும்!… டிரம்பின் அதிரடியான அறிவிப்புகளும்!!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

( அமெரிக்கா சீனா மீது பொருளாதார போரை அறிவித்ததும், டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை கைப்பற்றும் நோக்கங்களை அதிரடியாக அறிவித்துள்ளமைக்கும் எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன)அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரசார வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் பத்து வீத வரி விதிப்பதாக அறிவித்து இருந்தார். சீனா, கனடா, மெக்ஸிகோ மீதான நாடுகளின் மீதான பொருளாதார வரியை அமெரிக்க நிரந்தரமாக அதிகரிக்க போவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்கவின் பொருளாதார போரை அறிவித்த டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை கைப்பற்றும் நோக்கங்களை அதிரடியாக அறிவித்துள்ளமைக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.
கிரீன்லாந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதவை என்றும், அத்தீவை மீட்டெடுக்க வேண்டும் எனவும் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.அதேவேளை பனாமா கால்வாய் – கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைப் பெற இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை டொனால்ட் டிரம்ப் இதுவரை நிராகரிக்க மறுத்துவிட்டார். அத்துடன் மெக்ஸிகோ வளைகுடாவை “அமெரிக்க வளைகுடா” என்றும் டிரம்ப் மறுபெயரிட்டுள்ளார்.
அமெரிக்க வளைகுடா :
அமெரிக்கா ஒப்படைத்த பனாமா கால்வாயைத் தேவைப்பட்டால் எந்தக் கேள்விக்கும் இடங்கொடுக்காமல் உடனடியாகவும் முழுமையாகவும் அமெரிக்காவுக்குத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனாமா அதிபர் ஜோஸே ரௌல் முலீனோ, இந்த கால்வாய், பனாமாவுக்குச் சொந்தம், அது தொடரும் என்று குறிப்பிட்டபோது, அதையும்தான் பார்க்கலாமே என்று டிரம்ப் வெருட்டியுள்ளார்.
1900-களின் தொடக்கத்தில் அமெரிக்கா உருவாக்கிய – பசிபிக் – அட்லான்டிக் பெருங்கடல்களை இணைக்கும் – இந்தக் கால்வாயை, அதன் உரிமையையும் கட்டுப்பாட்டையும், 1977-ல் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் செய்து கொண்டதோர் உடன்பாட்டின்படி 1999, டிச. 31-ல் பனாமாவிடம் முழுமையாக அமெரிக்கா ஒப்படைத்தது.
சீனா மீது வரி :
டொனால்ட் டிரம்பின் சீனா மீதான அதிக வரி அறிவிப்புக்குப் பிறகு சீன அதிகாரிகள் உலக
வர்த்தக அமைப்பில் (WTO) புகார் அளித்தனர். பொருத்தமான எதிர்மறையான நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது.
வர்த்தக அமைப்பில் (WTO) புகார் அளித்தனர். பொருத்தமான எதிர்மறையான நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது.சீனா உலக வர்த்தக அமைப்பில் புகார் அளிப்பதன் மூலம் சர்வதேச வர்த்தக விதிகளை மதிக்கிறது என்றும், அதேசமயம் அமெரிக்கா தொடர்ந்தும் வர்த்தக விதிகளை மீறுவதாக குற்றஞ்சாட்டுகிறது.
ஆனால் எந்த வகையான நடவடிக்கைகள் என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. சீனாவின் வர்த்தக அமைச்சகம் அமெரிக்கா சர்வதேச விதிகளை கடுமையாக மீறுவதாக கண்டித்துள்ளது.
மேலும், அமெரிக்க நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவிற்கு (LNG) சீனா, 15% வரி விதித்துள்ளது.
மெக்சிகோ, கனடாவுக்கும் வரி:
மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள் மீதான 25% வரி விதிக்கப்பட்ட சில நாட்களிலேயே அமெரிக்க அரசால் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.
கனடாவில் டிரம்ப்பின் வரிகள் மீதான அழுத்தம் உடனடியாக எதிர்வினையை அளித்துள்ளது.
இந் நிலையில் சீனாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் அரசு மிரட்டியது. சீனா உடனடியாக பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் சில நாட்களின் பின்னர் சீனாவும் வர்த்தக போரினை உடனடியாக ஆரம்பித்தது.சீனா பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பினை அறிவித்தது.
மெக்ஸிகோ மற்றும் கனடா மீதான வரிகள் 25% ஆக இருந்தது. ஆனால் சீனாவுக்கு 10% மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பாரிய கண்டனங்கள் எழுந்துள்ளமையால் மெக்ஸிகோ, கனடா மீதான கூடுதல் வரி விதிப்பை பின்னர் டிரம்ப் அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்கா-சீனா உறவுகள்:
சீன தலைவர் ஷி ஜின்பிங்குடன், டிரம்ப் பதவி ஏற்பதற்கு முன்பே தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாகவும், இருவரும் வர்த்தக விவகாரங்களில் ஒத்துழைக்க முன்வருவதாகவும் கூறப்பட்டது.
ரஷ்யா-உக்ரைன் யுத்தம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அமெரிக்கா-சீனா ஒத்துழைப்பிற்கான வாய்ப்பு இருப்பதாக முன்னர் டிரம்ப் தெரிவித்தார்.
தீவிரமடையும் வர்த்தகப் போர்:
2018-ஆம் ஆண்டு டிரம்ப் சீனாவுக்கு எதிராக பெரும் வரிகள் விதித்தபோது சீனாவும் 185 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு வரியை கூட்டி பதிலடி அளித்தது.
தற்போதும் சீனா எதிர்காலத்தில் எதிர்மறையான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சீனா வர்த்தக போருக்கான எச்சரிக்கையை முழங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பத்து வீத வரி விதிக்க முடிவுசெய்த பின்னர், சீனா உடனடியாக பதிலடியாக அமெரிக்க நிலக்கரி மற்றும் எல்என்ஜிக்கு (LNG) 15% வரி விதித்துள்ளது.
இந்த நடவடிக்கை வர்த்தக போர் மேலும் தீவிரமாகும் என்ற எண்ணங்களை தூண்டும்
வகையில் உள்ளது. உலக வர்த்தக அமைப்பின் வழக்குடன் மட்டுமல்லாமல், சீனா தற்போது நேரடி எதிர்மறை நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தனது வர்த்தக உரிமைகளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
வகையில் உள்ளது. உலக வர்த்தக அமைப்பின் வழக்குடன் மட்டுமல்லாமல், சீனா தற்போது நேரடி எதிர்மறை நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தனது வர்த்தக உரிமைகளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.பொருளாதார தன்னிறைவுள்ள சீனா:
சீனாவின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மூன்று வீதம் மட்டுமே. இருந்தாலும் சீனா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து அமெரிக்காவுக்கு எதிராக வர்த்தக போரை தொடங்கியுள்ளது.
தற்போது அமெரிக்க வரிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறைப்பதற்கான திட்டங்களை சீனா முன்னெடுத்து வருகிறது.
சீனா எப்போதும் அமெரிக்க நாட்டுடன் நட்புறவை பேணுவதற்காகவே அமைதியாக இருப்பதாக, அமெரிக்க ஊடகமான சிஎன்என் தெரிவித்துள்ளது.
![]()