பலதும் பத்தும்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் நிகழ்வு!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றதுள்ளது

தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள்.

அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்வது வழக்கம். அவ்வாறே இம்முறையும் இடம்பெற்ற படையல் பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்பட்டது.

இவ்வழிபாட்டு முறை நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மரபுசார் பண்பாட்டு விழாவாக பேணப்பட்டு வருகிறதுடன் இப்புதிர் விழா 291ஆவது ஆண்டாக இவ்வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

   

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button