பலதும் பத்தும்

காதலி பற்றி மனம்திறந்த பில் கேட்ஸ்; யார் இந்த பவுலா ஹார்ட்?

பவுலா ஹார்ட் உடனான தனது காதல் குறித்து மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மனம் திறந்துள்ளார்.

முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், உலக பணக்காரர் பில் கேட்ஸ். திருமணமாகி 27 ஆண்டுகளான நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு மனைவி மெலிண்டாவை பில் கேட்ஸ் விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில், தனது புதிய காதல் குறித்து பில் கேட்ஸ் மனம் திறந்துள்ளார். பவுலா ஹார்ட் என்பவரை தற்போது காதலித்து வரும் பில் கேட்ஸ், தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தனக்கு பவுலா ஹார்ட் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றும் ஒலிம்பிக்கிற்கு செல்வது மற்றும் பல சிறந்த விஷயங்களைச் செய்வது என இருவரும் வேடிக்கையாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button