டிரம்பின் காசாவை கைப்பற்றும் திட்டம்: அமெரிக்க மேலாதிக்கமா அல்லது டிரம்ப்பின் அடாவடித்தனமா?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(கனடா, மெக்சிக்கோ மேலான பொருளாதார வரி விதிப்பும், கிரின்லாந்து, பனாமா கால்வாயை மீண்டும் கைப்பற்றும் முயற்சிகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை மேற்குலகம் முன்வைத்துள்ளது. அமெரிக்கா அதன் இராணுவ மற்றும் பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி பாலஸ்தீன தாயகத்மை அச்சுறுத்துவது நிச்சயமாக அரபுலகில் பலத்த கொந்தளிப்பை ஏற்படுத்தும்)
அமெரிக்காவின் வர்த்தக வரிகள், பொருளாதர தடைகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை கிழித்தெறியும் அச்சுறுத்தல்களால் மற்ற நாடுகளை கொடுமைப்படுத்துவது டிரம்ப் அரசின் தவறான அணுகுமுறை என்றே தோன்றுகிறது.
டிரம்ப்பின் அடாவடித்தனம் !
ஏனெனில் அமெரிக்க நலன்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும் ஐரோப்பிய நாடுகள், இந்த விவகாரத்தில் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக கனடாவில் பாரிய அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டை ட்ரம்ப் அரசு தோற்றுவித்துள்ளது.
இவ்வாரம் அமெரிக்க அதிபரின் புதிய கருத்துக்கு உலகம் முழுவதிலும் பாரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. பாலஸ்தீனியர்களை அவர்களின் சொந்த நிலத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் டிரம்ப் கூறிய விடயம் சர்வதேச அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா அதன் இராணுவ மற்றும் பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி பாலஸ்தீன தாயகத்மை அச்சுறுத்துவது நிச்சயமாக அரபுலகில் பலத்த கொந்தளிப்பை ஏற்படுத்தும்.
டிரம்ப் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக கனடா, மெக்சிக்கோ மேலான பொருளாதார வரி விதிப்பும், கிரின்லாந்து, பனாமா கால்வாயை மீண்டும் கைப்பற்றும் முயற்சிகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை மேற்குலகம் முன்வைத்துள்ளது.
டிரம்ப் அரசின் இதுபோன்ற செயல் உண்மையில் அனைத்து நாடுகளுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தும். மேலும் சர்வதேச ஒழுங்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயமும் உள்ளது. உலக நாடுகளின் பிரதிநிதியாகக் கூறப்படும் ஐக்கிய நாடுகள் சபை, உலக அமைதிக்காக, அத்தகைய நடவடிக்கைக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
அமெரிக்க மேலாதிக்கம் ?
இருப்பினும், அமெரிக்காவில் உள்ள சிவப்பு இந்தியர்களை அவர்களின் பழங்குடி நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர் என்பதை நினைவில் கொள்வது முக்கியம் ஆகும்.
இதேவேளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா காசா பகுதியை “கையகப்படுத்தும்” என்றும், பாலஸ்தீனியர்கள் நிரந்தரமாக அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியது, எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளில் 2.2 மில்லியன் மக்களை மீள்குடியேற்ற விரும்புவது, இஸ்ரேலிய அரசுக்கு மூலோபாய அடிப்படையில் வெற்றியின்
அறிகுறியாகும்.
இவ்வாரம் 4/2/25 செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, காசாவில் உள்ள அனைத்து பாலஸ்தீனியர்களும் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்று டிரம்ப் கூறினார்.
காசா பகுதியை அமெரிக்கா ஆக்கிரமித்து கையகப்படுத்தும், மேலும் அதனுடன் நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து, நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம். மேலும் அந்த இடத்தில் உள்ள அனைத்து ஆபத்தான வெடிக்காத குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களையும் அகற்றுவதற்கு பொறுப்பாவோம் என்று டிரம்ப் கூறினார்.
காசா கட்டுப்பாடு அமெரிக்கா வசம்:
இவ்வாரம் செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தபோது, காசாப் பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரவித்துள்ளார்.
டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு வெள்ளை மாளிகைக்குச் சென்ற முதல் வெளிநாட்டுத் தலைவர் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆவார்.
போரினால் சிதைந்த காசா பகுதியின் உரிமையை அமெரிக்கா எடுத்துக் கொள்ளும் என்று நெதன்யாகுவுடன் இணைந்த கூட்டுச் சந்தித்திப்பிலேயே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இக்கருத்தைக் கூறினார்.
காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும், நாங்களும் அதனுடன் இணைந்து செயல்படுவோம். நாங்களே அதை சொந்தமாக்கிக் கொள்வோம்.
காசாவை அபிவிருத்தி செய்வதாகவும், சவுதி அரேபியா அங்கு உதவியாக இருக்கும் என்றும் டிரம்ப் உறுதியளித்தார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மீதான இஸ்ரேலிய இறையாண்மையை அங்கீகரிப்பது குறித்து வாஷிங்டன் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்றும், ஆனால் அடுத்த மாதத்தில் இந்த தலைப்பில் ஒரு அறிவிப்பை வெளியிடும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் சவுதி அரேபியாவுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார். இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான சமாதானம் சாத்தியமானது மட்டுமல்ல, அது நடக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
பாலஸ்தீனியர்களை காசாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடியும் என்று டிரம்ப் கூறியதுடன், பாலஸ்தீன மக்கள் இப்போது காசாவில் வசிக்க முடியாது. அவர்களுக்கு வேறொரு இடம் தேவை என்று நான் நினைக்கிறேன். அது மக்களை மகிழ்விக்கும் இடமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று டிரம்ப் மேலும் கூறியதை அடுத்து இஸ்லாமிய நாடுகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
காசாவிற்கு அமெரிக்க துருப்புக்கள் ?
காசாவிலிருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களை எகிப்து, ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாற்றுவது தொடர்பான திட்டத்தை டிரம்ப் முன்னர் முன்மொழிந்து
இருந்தார். ஆனாலும் அம்மான் மற்றும் கெய்ரோ இரண்டும் இந்த திட்டத்தை நிராகரித்துள்ளன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
காசாவிற்கு அமெரிக்க துருப்புக்களை அனுப்புவீர்களா என்று கேட்டதற்கு, டிரம்ப், தேவையானதைச் செய்வோம், நாங்கள் அதை உருவாக்கப் போகும் பகுதியை நாங்கள் கையகப்படுத்தப் போகிறோம். ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம். இது மத்திய கிழக்கு மிகவும் பெருமைப்படும் திட்டங்களில் ஒன்றாகும் என்றார்.
ஆயினும் டிரம்பின் இந்த திட்டம் பல தசாப்த கால அமெரிக்க கொள்கையை முறியடித்து, அரபு உலகம் முழுவதும் சீற்றத்தைத் தூண்டும். அங்கு வாஷிங்டனின் நட்பு நாடுகள் பாலஸ்தீனியர்களை கட்டாயமாக இடம்பெயர்வதற்கு எதிராக நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றன.
![]()