உலகம்

அல்பேனியாவில் இருந்து இத்தாலிக்கு கொண்டு செல்லப்பட்ட அகதிகள்

வங்காளதேசம், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுகின்றனர். ஆனால் இந்த அகதிகள் குடியேற்றத்தால் அங்கு சட்டம், ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

இதனை கட்டுப்படுத்த எல்லை பகுதிகளில் ஐரோப்பிய நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளன.இதற்கிடையே கடந்த ஆண்டு சுமார் 66 ஆயிரம் பேர் அகதிகளாக இத்தாலியில் குடியேறி உள்ளனர். எனவே அகதிகள் குடியேற்றத்தை தடுக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் இத்தாலிக்குள் நுழைய முயன்ற 50 பேரை கைது செய்த கடலோர போலீசார் அல்பேனியாவில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவர்களை நாடு கடத்த அரசாங்கம் முடிவு செய்தது.

ஆனால் அவர்களை நாடு கடத்துவதற்கு தடை விதித்து இத்தாலி கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து அல்பேனியாவில் இருந்த சுமார் 50 அகதிகள் படகு மூலம் இத்தாலி கொண்டு வரப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *