முச்சந்தி
ரஷ்யாவுடன் உக்ரைன் போரிட்டது தவறு!…. காலங் கடந்த ட்ரம்பின் வாக்குமூலம் ! ஐங்கரன் விக்கினேஸ்வரா

ரஷ்ய படையெடுப்பை ஜெலன்ஸ்கி எதிர்த்து இருக்க கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அண்மையில் கூறியுள்ளார்.
அத்துடன் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஜெலன்ஸ்கி போரை தவிர்த்து இருக்க வேண்டும் என டிரம்ப் பேட்டியில் காரசாரமாக கூறியுள்ளார்.
2022 பெப்ரவரியில் நேட்டோவில் இணைவது என்ற உக்ரைனின் முடிவுக்கு எதிராக அந்நாட்டின் மீது ரஷ்ய படையெடுத்தது. இதற்கு உக்ரைனும் மேற்குலக நாடுகளின் ஆயுத உதவிகளைப் பெற்று, பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகள் இடையேயான போரானது இரு ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது.ஆரம்பத்தில் கார்கிவ், டொனியன்ஸ்க் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை ரஷ்யா முதலில் தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. தொடர்ந்து போரானது மூன்றாம் ஆண்டு நிறைவை நோக்கி செல்கிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு பாரியளவில் கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷ்யாவுக்கு வடகொரியாவும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது.
டிரம்ப் அளித்த அதிரடி பேட்டி:
இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஜெலன்ஸ்கி மிக பெரிய, அதிக சக்தி வாய்ந்த நாட்டுக்கு எதிராக போரிட்டு வருகிறார். ரஷ்யாவின் ராணுவ பலத்திற்கு எதிராக போரிடுவது என்பது வீணானது. அதனை அவர் செய்திருக்க கூடாது.
போரை தவிர்க்க, ரஷ்ய அதிபர் புட்டினுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்க வேண்டும். அதனை நான் எளிதில் செய்து இருப்பேன் என்றார்.
இரு நாடுகளின் மோதலால் லட்சக்கணக்கானோர் காயமடைந்தும், பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
எனினும், ரஷ்யா விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பெரிய அளவில் வரிகளை விதிக்கும். பொருளாதார தடைகளையும் விதிக்கும் என டிரம்ப் எச்சரித்துக் கூறியுள்ளார்.
எனினும், ரஷ்யா விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பெரிய அளவில் வரிகளை விதிக்கும். பொருளாதார தடைகளையும் விதிக்கும் என டிரம்ப் எச்சரித்துக் கூறியுள்ளார்.ரஷ்யாவுக்கும் டிரம்ப் எச்சரிக்கை:
தொடரும் போரை கை விடுங்கள், மீறினால் அதிக வரி, பொருளாதார தடை விதிப்போம் என ரஷ்யாவுக்கும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்
உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விரும்பவில்லை என்றால் அதிக வரி மற்றும் பெரிய பொருளாதார தடைகளை விதிப்போம் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும், ‘நான் அதிபராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்’ என டொனால்டு டிரம்ப் சபதம் செய்தார்.
அவர் அதிபராக பதவியேற்ற பின்னர்
இப்போர் தொடர்பாக செய்தி ஊடகங்களுக்கு டிரம்ப் அளித்த பேட்டியானது மேற்குலக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை எதிர்த்து போராட வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முடிவு செய்தமை தவறு. அவர் ரஷ்ய படைகளை எதிர்த்து இருக்க கூடாது. ஆனால் ஜெலென்ஸ்கி எதிர்த்து போராடி, வெற்றி பெறுவது சாத்தியமற்றது.ரஷ்யாவில் புட்டின் மிகப் பெரியவர். அத்துடன் மிகவும் சக்திவாய்ந்தவர். போரைத் தவிர்ப்பதற்காக ரஷ்யா அதிபர் புட்டினுடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். தற்போது உக்ரைன்-ரஷ்யா மோதல்கள் பேரழிவு தரும் இழப்புகளை விளைவித்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேவேளை உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விரும்பவில்லை
என்றால் அதிக வரி மற்றும் பெரிய பொருளாதார தடைகளை விதிப்போம். ஜோ பைடன் உக்ரைனுக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கி போரை மேலும் ஊக்குவித்து வந்தார் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
என்றால் அதிக வரி மற்றும் பெரிய பொருளாதார தடைகளை விதிப்போம். ஜோ பைடன் உக்ரைனுக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கி போரை மேலும் ஊக்குவித்து வந்தார் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.ஒரு நாளுக்குள் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் கூறியதன் பின்னர், தற்போது ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்க்கும் உக்ரைனின் முடிவு தவறானது என தற்போதய ட்ரம்பின் கருத்து ஐரோப்பிய – நேட்டோ தலைமை நாடுகளில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
![]()