முச்சந்தி

அநுர தரப்பு எம்.பிக்கு எதிரான அவதூறு பதிவு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவிந்திர நம்முனிகேவின் கைபேசி அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கையொன்றை பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான பதிவை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனியின் தொலைபேசி எண்ணை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கையொன்றை பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கு விசாரணைகளை ஜூலை 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button