இலங்கை
வீழ்ந்திருந்த மகிந்தவை தூக்கி நிறுத்திய அநுர

அரசியலில் வீழ்ந்திருந்த மகிந்தவை தூக்கிய நிறுத்திய பொறுப்பை தற்போதைய ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நடவடிக்கைகளால் அவருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மீண்டும் இணைந்துகொள்வது தொடர்பில் கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ஷ அரசியலில் நிர்க்கதியாகியிருந்தார். இப்போது அவர் தூக்கி நிமிர்த்தப்படுகின்றார். அதற்கான முழுப்பொறுப்பையும் தற்போதைய ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என்றார்.