முகநூல்
கனேமுல்ல சஞ்சீவவின் கொலை!

நேற்று கொழும்பு புதுக்கடை/அளுத்கடை/ Hulftsdorp நீதிமன்றில் பட்டப்பகலில் பொலிவூட், ஹொலிவூட் சினிமா பாணியில் நடந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலை நிச்சயம் ஆட்சியாளர்களை சிந்திக்க தூண்டியிருக்கும். இதில் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டியவை இரண்டு விடயங்கள்.
1. பயங்கரமான ஆயுதங்களும், மிகவும் பயிற்சி பெற்ற முன்னாள் இராணுவத்தினரும் பாதாள உலகத்தில் உலாவரும்போது ஒருவருக்கும் 100% பாதுகாப்பு வழங்கப்பட முடியாது.
2. காவல்துறை முற்றாக ஊழல்வாதிகளால் நிரம்பியுள்ளதால் விசாரணைகளை நீதியாக நடாத்த முடியாது.
என்ன செய்யலாம்?
கோவிட் காலத்தில் காணொளி மூலம் இலங்கையில் நீதி விசாரணை நடைபெற்றது. இந்தியாவில் அதற்கு முன்பாகவே பாதுகாப்பு வழங்குவது கடினம் என்று கருதப்படும் வழக்குகளுக்கு காணொளி மூல விசாரணை நடைபெற்று வந்துள்ளது. தமிழ் நாட்டில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கை இதற்கு உதாரணமாக எடுக்கலாம். ஆகவே இம்முறையை அமுல்படுத்துவதன்மூலம் நேரம், செலவு போன்றவற்றை பெருமளவில் குறைக்கலாம்.
எந்த வழக்குக்கும் சாட்சிகள், வழக்காளிகளாக பெரும்பாலும் புலனாய்வுத்துறை, காவல்துறை, சட்டமா அதிபர் திணைகளமே உள்ளதால் இந்த விசரணைகள் நீதி நேர்மையாக நடப்பது சாத்தியமில்லாமல் உள்ளதை ஈஸ்டர் குண்டு வெடிப்பு விசாரணையில் எல்ல்லோரும் பார்க்கின்றோம்.
வெட்கத்தை விட்டு அரசாங்கம் ஸ்கொட்லண்ட் யார்ட் (New Scotland Yard) போன்ற அரச நிறுவனக்களின் உதவிகளையோ அல்லது Pinkerton, Control Risks, G4S போன்ற சர்வதேச தனியார் புலனாய்வு நிறுவனங்களையோ நாட வேண்டும். இவை அரசியலாகாமல் இரகசியம் காப்பது ஆட்சியாளர்களின் கடமை.
ஆமை பிடிப்பார் மல்லாத்துவார், நாமது சொன்னால் பாவம்.
The murder of Ganemulla Sanjeeva in broad daylight in the Hulftsdorp court in Bollywood and Hollywood cinema style must have made the rulers think. There are two main points to note.
1. No one can be 100% safe when roaming the underworld with fearsome weapons and highly trained ex-army.
2. Investigations cannot be conducted fairly as the police are completely corrupt.
What can be done?
Court proceedings in Sri Lanka were held through video during the Covid era. In India, even before that, video-based hearings have been conducted in cases considered difficult to secure. Happened in Tamil Nadu Pollachi Sexual assault Take the case as an example. So by applying this method, time and cost can be greatly reduced.
Because the witnesses and litigants in any case are usually the Department of Investigation, the Police and the Attorney General’s Department We can all see in the Easter bombings that these investigations make it impossible for justice to be carried out fairly.
The government should seek the help of government agencies like New Scotland Yard or international private investigative agencies like Pinkerton, Control Risks, G4S to avoid the shame. the rulers must keep these confidential without becoming political.
![]()