முகநூல்
சீனா-அமெரிக்கா இடையான தொழில்நுட்ப போரில் சமாதானம் பேச விரைந்திருக்கும் 100 வயதான ஹென்றி கிசிஞ்சர்!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உலகளாவிய தொழில்நுட்பப் போர் ஒரு புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. இரு நாடுகளும் குறைக்கடத்தி (semiconductor) உற்பத்திக்குத் தேவையான முக்கியமான உலோகங்களின் கட்டுப்பாடு மற்றும் வழங்கல் மீது கடுமையான போரில் ஈடுபட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய கலியம் மற்றும் ஜெர்மானியத்தின் ஆதாரமான சீனா, இந்த உலோகங்கள் மீது ஏற்றுமதி தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனான தொழில்நுட்ப வர்த்தகப் போரை மூட்டியுள்ள. பதிலுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மைக்ரோ சிப் தயாரிப்பு சம்பந்தமான தொழில்னுட்பங்களுக்கு தடை விதித்து தங்கள் தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் விளைவாக உலகளாவிய குறைக்கடத்தி தொழில் மற்றும் தொழில்நுட்ப மேலாதிக்கத்திற்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இந்த முட்டுக்கட்டையை நீக்குவதற்காக அமெரிக்க அதிபர் 100 வயதான ஹென்றி கிஸ்ஸிங்கரை சீன அதிபரை சந்திப்பதற்காக அனுப்பியுள்ளார்.
யார் இந்த ஹென்றி கிசிஞ்சர்?
ஹென்றி கிசிஞ்சர் (Dr.Henry Kissinger) ஜேர்மனியில் பிறந்த அமெரிக்க அரசியல் விஞ்ஞானி, தூதர், மற்றும் 1973 இல் நோபல் பரிசு பெற்றவர். இவர் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பின்னர் அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஜெரால்ட் போர்ட் ஆகியோரின் அமைச்சரவைகளில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
(இன்றைக்குதான் அவர் உயிரோடு இருப்பதே எனகு தெரியவந்தது)