உலகம்

கனடாவின் தேர்தல் தலையீட்டை நிராகரிக்கிறது இந்தியா!

கனேடியத் தேர்தலில் இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட கனடாவின் அறிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சகம்  நிராகரித்தது.

அதேநேரம், புது டெல்லியின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக ஒட்டாவா மீதும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இது குறித்து பகிர்ந்துள்ள அறிக்கையில்,

இந்தியாவின் உள்விவகாரங்களில் கனடா தொடர்ந்து தலையிட்டு வருகிறது.

இது சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கான சூழலை உருவாக்கியுள்ளது.

இந்தியா மீதான கனேடிய அரசாங்க அறிக்கையின் உள்நோக்கங்களை நாங்கள் நிராகரிக்கிறோம்.

மேலும், சட்டவிரோத இடம்பெயர்வுகளை செயல்படுத்தும் ஆதரவு அமைப்பு மேலும் கவனிக்கப்படாது என்று எதிர்பார்க்கிறோம் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய செய்தித்தாள் தி குளோப் அண்ட் மெயில், ஒரு கூட்டாட்சி தேர்தலில் மூன்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு “மறைமுகமான நிதி உதவியை” வழங்குவதற்கு ப்ராக்ஸி கணினி மென்பொருள் சேவர்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியது.

இந்த விவகாரத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீனா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளின் தேர்தல்களில் தலையீடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை கமிஷன் தலைவராக நீதிபதி மேரி-ஜோஸ் ஹோக்கை 2023 செப்டம்பரில் நியமித்தார்.

கமிஷனர் மேரி-ஜோசி ஹோக் தலைமையிலான விசாரணை, “2021 தேர்தலின் போது விருப்பமான வேட்பாளர்களுக்கு இரகசியமாக நிதி உதவி வழங்குவதற்கு ப்ராக்ஸி சேவர்களை ” பயன்படுத்த இந்திய அரசாங்கம் முயற்சித்திருக்கலாம் என்று குற்றம் சாட்டியுள்ளது.

கனடாவில் தேர்தல் தலையீட்டில் ஈடுபடும் இரண்டாவது மிகவும் வினைதிறனான நாடாக இந்தியாவை முத்திரை குத்தியது.

கனடாவின் வெளிநாட்டு தலையீட்டின் முக்கிய வடிவமாக இந்தியாவும் தவறான தகவல்களைப் பயன்படுத்துகிறது என்று அறிக்கை மேலும் கூறியது.

காலிஸ்தானி பிரிவினைவாதம் பற்றிய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவலைகள் தொடர்பாக நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் உள்ள “சவால்கள்” குறித்தும் அறிக்கை குறிப்பிடுகிறது.

காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக 2023 இல் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதிலிருந்து இந்த அறிக்கை இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான அண்மைய பிரதான புள்ளியாக மாறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.