யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிடும் மக்கள்

15 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி-2025 நிகழ்வு வெள்ளிக்கிழமை (24) யாழ்.முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமானது.
வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி கூடங்களை திறந்து வைத்தனர்
இந்த கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி வரையில் இடம்பெறவுள்ளது
இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக வல்லுனர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைத்து பொருளாதார நிகழ்வாக நடைபெறவுள்ளதுடன் குறிப்பாகப் பிராந்தியத்தின் பொருளாதார ஆற்றல் மற்றும் செழிப்பான தொழில்துறை என்பன விரிவாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளது
300க்கும் மேற்பட்ட விற்பனை காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் நிர்மாணத்துறை, சுற்றுலாத்துறை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், கல்வி, வாகனம், விவசாயம், ஆடையுற்பத்தி, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியின் ஆரம்ப நாளான வெள்ளிக்கிழமை உள்நாட்டவர்கள் மாத்திரமன்றி வெளிநாட்டவர்களும், புலம்பெயர் தமிழ் மக்களும் என பலரும் அதிக ஆர்வம் செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.

![]()