முச்சந்தி

வடமாகாணத்தில் கடந்த ஆண்டில் 34 படு கொலைச் சம்பவங்கள்; 255 கொள்ளைகள், 501 திருட்டுக்கள் 

வடமாகாணத்தில் கடந்த ஆண்டில் 34 படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் கடமையாற்றி வந்த 28 பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 34 படுகொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் 28 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் பெற்றமை, மோசடிகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் 34 படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும், 255 கொள்ளைகள், 501 திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், 70 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button