இராணுவ தளங்களுக்கு அருகே ட்ரோன்களை சுட்டு வீழ்த்த ‍ஜேர்மன் அனுமதி!

ஜேர்மனியின் அமைச்சரவை இராணுவ தளங்கள் அல்லது பிற முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு அருகில் காணப்படும் சந்தேகத்திற்கிடமான ட்ரோன்களை சுட்டு வீழ்த்த இராணுவத்திற்கு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான ஒரு வரைவு சட்டமூலத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இது ஜேர்மனியின் ஆயுதப் படைகள் அல்லது பொலிஸாருக்கு, முக்கியமான தளங்களில் ஆளில்லா விமானங்களைச் சுட அனுமதிக்கும்.

உக்ரேனுக்கு எதிரான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆக்கிரமிப்புப் போருக்கு பிறகு, ஜேர்மன் பாதுகாப்பு பகுதிகளில் ட்ரோன்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுவதை நாங்கள் காண்கிறோம், இது காவல்துறைக்கும் அவர்களின் தற்போதைய தொழில்நுட்பத்திற்கும் அதிகரித்து வரும் சவாலாக உள்ளதாக ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசரின் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.

ராம்ஸ்டீன் விமான தளம் மற்றும் ஜெர்மனியில் உள்ள உக்ரேனிய வீரர்களுக்கான இராணுவ பயிற்சி தளங்கள் மீது சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமானங்கள் காணப்பட்டதாக ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரைன்மெட்டால் மற்றும் பிஏஎஸ்எஃப் போன்ற தொழில்துறை ஜாம்பவான்களிலும் ட்ரோன்கள் காணப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

உக்ரேனை ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா ஒரு “நிழல் போரை” ஆரம்பித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

சர்வதேச விமானங்களை தகர்க்க, உள்கட்டமைப்பைத் தாக்க – அல்லது ஜனநாயக தேர்தல்களில் தலையிடும் முயற்சிகள் இதில் அடங்கும்.

ஆனால் அதனை மெஸ்கோ மறுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *