முச்சந்தி
இந்திய இழுவை மடிப் படகுகளால் வடபகுதி மீனவர்கள் பெரிதும் பாதிப்பு

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது மீனவர்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து துணைத் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
குறிப்பாக இழுவை மடிப் படகுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நிலை குறித்தும் மீனவர்களின் தேவைகள் குறித்தும் இந்திய துணைத் தூதர் மீனவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
மேற்படி சந்திப்பின் போது கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளால் துணைதூதுவருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மேற்படி சந்திப்பில் யாழ் இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகளான செல்வி ரம்யா மற்றும் நாகராஜன் ,அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
![]()