ஜே.வி.பி.யினரின் தடம் மாறுகிறது; சோஷலிசத்தை கைவிட்டு லிபரலுக்குள் நுழைவு
ஜே.வி.பியினர் சோஷலிசத்தை கைவிட்டு லிபரலுக்குள் நுழைந்துள்ளனர் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ராஜித சேனாரட்ன இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சோஷலிசத்தை கைவிட்டு லிபரல்வாதிகளாக மாறியுள்ளனர். சோஷலிசத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் பயணிக்க முடியாது. இதனால் லிபரல்வாத பொருளாதாரத்திற்குள் சென்றுள்ளனர். சீனா இன்னும் சோஷலிசத்தை கைவிடவில்லை. ஆனால் இவர்கள் இப்போது சோஷலிசத்தை கைவிட்டுள்ளனர். சோஷலிசம் தொடர்பில் எதுவும் தெரியாதவர்களே இப்போது திசைக்காட்டியில் பேராசிரியர்கள், கலாநிதிகள் என்று இருக்கின்றனர். பொருட்களிலும் அவர்களின் மாற்றங்கள் இருக்கின்றன. அதாவது இறக்குமதி பொருட்கள் துறைமுகத்திற்குள் வந்துள்ளது. இவற்றில் ஒருபகுதி சோஷலிசம் இன்னுமொரு பகுதி லிபலராக இருக்கின்றன. இந்தத் திட்டத்தையும் சரியாக முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.
ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு கருத்து தெரிவித்தவர்கள் இப்போது சர்வதேச நாணய நிதியத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன்படி இவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்களையும் ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர் என்றார்.
![]()