தமிழக முதலமைச்சருடன் தமிழ் எம்.பி.க்கள் ‘செல்பி’
சென்னையில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதித் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காட்சியில் தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை அகதிகளின் விற்பணையகங்களும் இடம்பெற்றிருந்ததாக தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இ. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் கூறுகையில்,
தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை அகதிகளின் தொழில்துறை ஊக்கமானது மிகுந்த மனமகிழ்வை உண்டாக்கியது. இவ் நிகழ்வில் பல காலமாக அகதிகளாக வாழும் எம்மவர்களை மற்றும் நீண்டகால நண்பர்களை சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுடன் அவரே அவரது தொலைபேசியில் எம்மை செல்பி எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அ. அடைக்கலநாதனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
![]()