சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியை இல்லாமலாக்கும் ரணிலின் இரகசியத் திட்டம் தொடர்கிறது

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றை இணைக்கும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள போதும், ஐக்கிய மக்கள் சக்தியை இல்லாமலாக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரகசியத் திட்டம் தொடர்ந்தும் செயற்படுத்தப்படுவதாகவும் அக் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம் ஏற்படுவதாக வெளியான செய்தியின் பின்னணியில், அதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, இது ரணில் விக்கிரமசிங்கவின் ஒப்பந்தம் எனவும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் எந்த நெருக்கடியும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தது.

எனினும் இவ்வாறான செய்திகள் மூலம் ரணில் விக்ரமசிங்கவின் ஒப்பந்தம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்கட்சி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக சமூகமயப்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. தனக்கான நெருக்கடிகளை மறைப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதே ரணில் விக்ரமசிங்கவின் திட்டம் எனவும் இதற்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.

இம்முறை யானையைக் கூட வாக்குச் சீட்டில் சேர்க்க முடியாத ரணில் விக்ரமசிங்க, சிலிண்டரைக் காட்டி அரசியல் அனாதைகளாக்கியதாக, திறமையான இளம் எம்.பி.க்கள் குழுவொன்று குற்றஞ்சாட்டிய பின்னணியில், பிரதான எதிர்க்கட்சியில் மோதல்களை உருவாக்கும் முயற்சிகள் வெறுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த பெருமைக்குரிய ஐக்கிய தேசியக் கட்சியை, அன்றும், இன்றும் செயலிழக்கச் செய்த ரணில், நாட்டின் அரசியல் கட்சிகளை அழிக்கும் திட்டமே என்பது மிகத் தெளிவாகத் தெரிவதாகவும் 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்து இந்த நாட்டில் நல்லாட்சி என்ற கருத்தை நிலைநாட்டிய ரணில், மாதுலுவாவே சோபித தேரர் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களும், பொது மக்களும் பெற்ற ஆணையை எட்டி உதைத்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதியில் இன்னொரு ராஜபக்சவை கொண்டு வருவதற்கான சூழலை உருவாக்கியதாகவும் நல்லாட்சிக்கான மக்களின் எதிர்பார்ப்பு சிறிய தொகையில் கூட நிறைவேற்றப்பட்டிருந்தால், இந்த மண்ணில் இன்னொரு ராஜபக்சவுக்கு இடமிருக்காது. மக்களின் வாக்குகள் மூலம் ஜனாதிபதி நாற்காலியில் அமர முடியாது என்பதை அறிந்த ரணில், இறுதியாக மக்கள் போராட்டம் என்ற போர்வையில் தனது இலக்கை அடைந்தார். ஆனால் தன்னை ஜனாதிபதி நாற்காலியில் அமர விடாமல் தடுத்த அனைவர் மீதும் தனது வெறுப்பை ஒரு போதும் குறைக்காத ரணில், மைத்திரிபால சிறிசேனவின் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை அகற்றும் நடவடிக்கையை முதலில் முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மகிந்த மற்றும் ராஜபக்சவின் கோட்டையான பொதுஜன பெரமுனவை இல்லாமலாக்கி, பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகள் வழங்கி அவர்களை அழித்ததாகவும் 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்த நாளிலிருந்து ரணில் மேற்கொண்ட பிரசாரம் தோல்வியடைந்தாலும் தற்போது ஒன்றிணைந்த மக்கள் சக்தியை பிளவுபடுத்தும் இலக்கை அடைய இன்னொரு சுற்றுக்கு தயாராகி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *