கெஹலிய குடும்பத்தின் 28 வங்கிக் கணக்குகள் உட்பட அனைத்து சொத்துக்களும் தற்காலிகமாக முடக்கம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் 28 வங்கிக் கணக்குகள் மற்றும் ஏனைய சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண மேல் நீதிமன்ற பதிவாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவித்தலின் பிரகாரம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 28 வங்கிக் கணக்குகளையும் 05 ஆயுள் காப்புறுதிக் கணக்குகளையும் செயலிழக்கச் செய்துள்ளதுடன், கொழும்பு 05 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பென்ஸ் வகை காரையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதாகும். ஹட்டன் நெசனல் வங்கியின் 16 வங்கிக் கணக்குகளும் 5 ஹட்டன் நெசனல் வங்கி காப்புறுதி கணக்குகளும் உள்ளடங்களாக மேலும் பல வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
2024 டிசம்பர் 23 முதல் 2025 ஜனவரி 03 வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த சொத்துக்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()