இன்று ஆழிப் பேரலையின் 20 ஆவது நினைவு தினம்
சுனாமி ஆழிப்பேரலையில் காவு கொள்ளப்பட்டன உறவுகளின் இருபதாம் ஆண்டு நினைவு தினம் இன்று வியாழக்கிழமை(26) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
2004 ஆம் ஆண்டு இதே தினம் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பாரி கடல் அலைகள் எழுந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளை பலமாகத் தாக்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டதுடன் பாரிய சொத்து அழிவையும் ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையின் கரையோர பகுதிகளிலும் பாரிய உயிரிழப்புக்கள் அழிவுகள் ஏற்பட்டன.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
வடமராட்சி கிழக்கில் 1250 வரையான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.இதில் மணல்காட்டு பகுதியில் 72 பேர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட இடத்திலும் உடுத்துறை, கட்டைக்காடு ஆகிய பகுதிகளில் பெருமளவானோர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட இடங்களிலும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.
![]()