இலங்கை

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் எடுத்துச் சென்றமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த நிறைவிடத்திற்கு முன்பாக   (27) மாலை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திலீபனின் நினைவிடத்தில் அவரது நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாளான கடந்த 15 ஆம் திகதி இச்சிலை வைக்கப்பட்டு, தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், நேற்று (26) இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில், இன்று நினைவிடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட பொலிஸார், இரண்டு பொலிஸ் வாகனங்களில் வருகை தந்து, அங்கிருந்த சிலையைப்பை எடுத்துச் சென்றுள்ளனர்.

பொலிஸாரின் இந்நடவடிக்கையைக் கண்டித்தும், அகற்றப்பட்ட சிலையை உடனடியாக மீள நிறுவக் கோரியுமே பொதுமக்கள் மற்றும் அமைப்பாளர்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் ஒருவரின் சிலையை அமைப்பது அல்லது நினைவு கூறுவது முடியாது என்பதால், நல்லூர் ஆலயத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது.

திலீபனின் சிலை அவ்விடத்தில் வைக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றில் அறிக்கையிடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சிலையை அங்கு வைப்பதற்கு நேற்று வரை மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், உரிய காலத்திற்கு பின்னர் அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *