வெள்ள அநர்த்தத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கு அவுஸ்திரேலியா – – இலங்கை மாணவர் கல்வி நிதியம் உதவி!
அண்மைக்காலத்தில் இலங்கையில் மழை – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வடபிரதேச மக்களுக்கு உதவும் பணிகளை யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான சிறுவர் அபிவிருத்தி நிலையம் மேற்கொண்டு வருகின்றது.
இந்த அமைப்பு விடுத்த வேண்டுகோளையடுத்து அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் சுமார் பத்து இலட்சம் ரூபாவை அனுப்பி வைத்தது.
குறிப்பிட்ட நிதியுதவியின் மூலம் பாதிக்க;ப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.


இவ்வுதவிகள், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பிரசேங்களில் அண்மையில் வழங்கப்பட்டது
இது தொடர்பாக குறிப்பிட்ட யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் திரு. சுசீந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது பிரதேசம் வெள்ள அனர்த்தத்தால் பாரியளவு பாதிப்புக்குள்ளாகியிருந்தபோது பல்வேறு பிரதேச செயலகங்;களிலுமிருந்து மக்களுக்கான அவசர உலர் உணவுப் பொதிகளுக்கான கோரிக்கைகள் எமக்கு கிடைத்ததன.
. அதற்;கமைய எமது நிறுவனத்தினால் உடனடியாக உதவிகளை வழங்குவதற்கான நிதி எம்மிடம் இல்லாத போது, அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்டகாலமாக இயங்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினைத்தொடர்பு கொண்டு மக்களின் நிலைப்பாட்டை கூறியவுடன், இந்நிதியம், உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் ;பொதிகள் வழங்குவதற்காக ஏறக்குறைய சுமார் பத்து இலட்சம் ரூபா நிதியினை வழங்கி உதவியது.


மக்களுக்கான உதவிகளை பிரதேச செயலக செயலர், உதவிப்பிரதேச செயலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்களது ஒத்துழைப்புடனும், அவர்களது கண்காணிப்பிலும் உலர் உணவுப் பொதிகளையும், சுகாதாரப் ;பொருட்களையும் எமது பணியாளர்கள் களத்தில் நின்று ஒழுங்கமைத்து வழங்கிவைத்தார்கள்.
நாம் எமது மக்கள் சார்பாகவும் பிரதேச செயலகங்கள் சார்பாகவும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் சமூக அக்கறையையும் பாராட்டுகின்றோம்.


இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு மீண்டும் எமது நன்றியைத் தெரிவித்துக ; கொள்கின்றோம்
இப்படிக்கு க. சுசீந்திரன் ( தலைவர் ) யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையம் .
![]()
![]()
—0—.
![]()